தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

வடக்கு – கிழக்கில் இரகசிய முகாம்கள் இல்லை: பிரதமர் ரணில்

Ranil News copy

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரகசிய முகாம்கள் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான இரகசிய முகாம்கள் எதுவும் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இரகசிய முகாம்கள் காணப்படுவதாக ஓர் நிலைப்பாடு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் நாங்கள் கூறினோம் கடற்படையினருடையதோ அல்லது வேறும் தரப்பினருடையதோ முகாம்கள் கிடையாது. அப்படி எங்காவது இருக்கின்றது என்றால் அதனை வந்து பார்வையிட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் உயிரிழந்து அல்லது நாட்டை விட்டுவெளியேறி இருக்கலாம் என எண்ண வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2008ஆம் ஆண்டில் கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கோடாபே என்னும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போனோர்களின் பெற்றோர்கள் முன்வைத்த மனுவை பரிசீலினை செய்ததன் பின்னர் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய இவ் உத்தரவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com