தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

விஜய் நற்பணி இயக்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

vijay 14522

தூத்துக்குடி மட்டக்கடை, சின்னகடை தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர்.மேலும் இவர் மாவட்ட விஜய் நற்பணி இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான இவர் தனது சகோதரர்களுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வதுடன், லாரி செட்டும் வைத்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது வீ்ட்டருகே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்கவே வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர்.

தரை மற்றும் சுவரில் மோதி பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பில்லா ஜெகனின் பைக், மற்றும் மாடியில் குடியிருக்கும் நிதி நிறுவன ஊழியர் ஜாபர் ஷா என்பவரது பைக்குகள் தீயில் எரிந்து நாசமாயின.

உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பைக்குகள் எரிந்து நாசமாகிவிட்டன. இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினார்.

தொழில் போட்டியால் இந்த சமபவம் நடந்ததா, அல்லது முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com