தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

வடமராட்சியில் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் போராட்டம்!

alawa News copy

வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் இறுதிச்சடங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தின் போது கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

திக்கம், நாவலடி சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது”,

“இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை”,

“அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்”,

“பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்”

போன்ற வாசகங்கள் பொறிக்கப்பற்ற பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com