தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ரமழான் மாதம் இன்று தொடக்கம்! 113 இந்திய மீனவர்களை விடுதலை செய்த பாகிஸ்தான்

pak

இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் சிறையின் துணை கண்காணிப்பாளர் முகமது ஹூசைன் செஹ்டோ, புனிதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர் வாகா எல்லையில் வைத்து அவர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் மீனவர்கள் சால்வையை பரிசாக தந்து அனுப்பி வைத்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com