தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

அமெரிக்காவின் அறிக்கை ; நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை

us

விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கும் சர்வதேச ஒருங்கிணைப்பு இன்னும் தொய்வில்லாமல்தான் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையையடுத்து, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இலங்கையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்சியின் எம்.பியும் முன்னாள் மந்திரியுமான ஜி.எல் பெரீஸ் கூறியதாவது:- “ அமெரிக்காவின் அறிக்கை தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கை தொடர்பாக அரசு சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இலங்கை அரசு நடத்தும் பேச்சு வார்த்தை மீண்டும் விடுதலைப்புலிகளை காணவிரும்புவர்களுக்கு ஊக்கமளிப்பதாய் அமையும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமிழர்களின் உடனடி தேவைக்கு தீர்வு காணும் நோக்கில் லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் மங்கள சமரவீரா அண்மையில் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுதுறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு இலங்கையில் எந்த தீவிரவாத தாக்குதலும் நடக்கவில்லை. எனினும், இலங்கை அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக 13 விடுதலைப்புலிகள் 2014-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சிலர் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் என்றும் 2009-ம் ஆண்டு நடந்த உச்சக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிப்பட்டு விட்டாலும் கூட, சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளிடையே தற்போதும் ஒருங்கிணைப்பு உள்ளது. அந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பதும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com