தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

2 திருடர்களின் கைகளை வெட்டிய ஐஎஸ் தீவிரவாதிகள் .

is News

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திருடியதாகக் கூறி இரண்டு பேரின் கைகளை நூற்றுக்கணக்கான ஆண்கள், சிறுவர்கள் முன்னிலையில் வெட்டியுள்ளனர். ஈராக்கில் 2 ஆண்கள் திருடியதாகக் கூறப்படுகிறது.

உடனே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த இருவரையும் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்கள், சிறுவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு தண்டனை அளித்துள்ளனர்.

அதாவது சில தீவிரவாதிகள் அந்த நபர்களை பிடித்துக் கொள்ள ஒரு தீவிரவாதி அவர்களின் கையை கத்தியால் வெட்டியுள்ளான். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் தண்டனை கொடுக்கிறேன் என்ற பெயரில் மக்களை கல்லால் அடித்துக் கொல்வது, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்வது, தலையை துண்டித்து கொல்வது என்று கொடூர செயல்களை செய்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கொடூர தண்டனைகளை வீடியோ எடுத்து வெளியிடக் கூடாது என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் தீவிரவாதிகள் திருடர்களின் கையை வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களை தீவிரவாதிகள் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து வருகிறார்கள். கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களை கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள்.

கொள்ளையர்களை கொலை செய்கிறார்கள். மது அருந்தினால் 80 கசையடி அடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com