தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

தலிபான்கள் பிடியில் இருந்து குந்தூஸ் நகரை மீட்ட ஆப்கன் படைகள்

talipan

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ளது குந்தூஸ் நகரம். இங்கு கடந்த திங்கட்கிழமையன்று பக்ரீத் பெருநாள் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் குந்தூஸ் நகரம் முழுவதும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

நகரம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை சூறையாடிய தீவிரவாதிகள், சிறையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை விடுவித்ததோடு, நகர் முழுவதும் ஆப்கன் கொடியை அகற்றிவிட்டு தங்களது கொடியை ஏற்றினர்.

இதனையடுத்து நேட்டோ பயிற்சி பெற்ற ஆப்கன் படைகள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த 3 நாட்களாக இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று குந்தூஸ் நகரம் முழுவதும் ஆப்கன் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நகர் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த தலிபான்களின் கருப்பு – வெள்ளை கொடி இறக்கப்பட்டு ஆப்கன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டது.

இந்த சண்டையில் 200-க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆப்கன் படைகள் தரப்பில் உயிரிழந்தவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் தொடர்ந்து கேட்டதாகதவும், தாங்கள் மிகுந்த பயத்துடன் இருந்ததாகவும் குந்தூஸ் நகரவாசிகள் தெரிவித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com