தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

நெற்குன்றம் லஷ்மி சாயிபாபா கோவிலில் 22-ந்தேதி கும்பாபிஷேகம்

baba_n

நெற்குன்றம் கங்கையம்மன் நகரில் ஸ்ரீலஷ்மி சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. இங்கு ஷீரடி போலவே சாவடி, துவாரக மணி, குருஸ்தானம் அமையப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் தென் ஷீரடியாக விளங்கும் இத்திருத்தலத்தில் உலகிலேயே மிக உயரமாக நின்ற கோலத்தில் 72 அடி உயர சாயிபாபா சிலை நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி ஸ்ரீ லஷ்மி சாயிபாபா கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை நடக்கிறது.

முன்னதாக இன்று மாலை முதல்காலயாக பூஜையும் தீபாராதனையும் நடக்கிறது. நாளை (புதன்) காலை இரண்டாம் கால யாக பூஜையும், கலச பூஜையும், மகா சண்டிஹோமமும், மாலை 5 மணிக்கு அனைத்து தேவதைகளுக்கு பிரதிஷ்டையும் நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 5 மணிக்கு 4–ம் கால யாக சாலை பூஜையும் காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீலஷ்மி சாயிபாபா வீதி உலாவும் இரவு 7 மணிக்கு வீரமணி ராஜீ குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com