தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ரஷ்யாவிலிருந்து எகிப்து செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: புதின் உத்தரவு

putin

எகிப்தில் விமானம் விபத்தைச் சந்தித்தது தொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் வரை விமானங்களை ரத்து செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் சுற்றுலா தளத்திலிருந்து சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பத்தின் அருகே விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

விமானத்தின் இயந்திரக்கோளாறு, மனிதத் தவறுகள், தீவிரவாத சதி உள்பட பல கோணங்கள் குறித்து ஆராய்ந்த விசாரணை அதிகாரிகள், விமானத்தில் குண்டு வைக்கப்பட்டதாலேயே இந்த சம்பவம் நடந்திருக்கும் என தற்போது கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து முழு உண்மைகளும் வெளிவரும் வரை ரஷ்யாவிலிருந்து எகிப்து செல்லும் விமானங்களை ரத்து செய்ய அந்நாட்டு புலனாய்வுத்துறை அதிபர் விளாடிமிர் புதினைக் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, ரஷ்யாவிலிருந்து எகிப்து செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com