தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

உலகத்தின் மொத்த கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

mony News

உலகின் மொத்த கடன் 152 த்ரில்லியன் டாலர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் இர்வின் ஃபிஸ்சர் உலகத்தின் மொத்த கடன் 152 அமெரிக்க ட்ரில்லியன் டாலர் என்று தெரிவித்துள்ளார்.

இது உலக ஜி.டி.பி.யில் 225 சதவீதம். குறிப்பாக இவற்றில் 100 த்ரில்லியன் டாலருக்கு மேல் தனியார் மற்றும் தனிநபர் கடன்களாம்.

மீதம் உள்ளவைகள் பொதுத்துறை மற்றும் அரசு கடன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கடன் தொகை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும். 

இந்த கடன் பிரச்னையை சரி செய்யாவிட்டால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும், அதில் இருந்து மீள முடியாது என்றும் இர்வின் எச்சரித்துள்ளார்.