தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

யாழ் சுண்ணாகம் பகுதியில் வெள்ளை வேன் கடத்தல்!

jaff copy

சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்றுமுன்னர் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், வெள்ளை வேன் கடத்த முற்பட்ட போது பொது மக்கள் அங்கு ஒன்று கூடி அதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெள்ளை வேன் கடத்தலில் மூன்று பேர் ஈடுப்பட்டுள்ளதாகவும் இருவர் பிடிப்பட்ட நிலையில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடிப்பட்ட இருவரையும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

எனினும் வெள்ளை வேன் கடத்தலில் ஈடுப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளதால் சுண்ணாகம் பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் கூறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது இரணுவத்தினரும் வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.