தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

இலங்கை அதிபர் இன்று இந்தியா செல்கின்றார்

mai News

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். சிறிசேனவின் இப்பயணத்தின் போது தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள புகையிலை கட்டுப்பாடு குறித்த ‌மாநாட்டில் சிறிசேன சிறப்பு ‌அழைப்பாளராக கலந்துகொள்கிறார். இன்று மாலை டெல்லி வரும் சிறிசேன, குடியரசுத் தலைவர் பி‌ரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளார். பின் நாளை நடக்க உள்ள புகையிலை கட்டுப்பாடு மாநாட்டில் அவர் பேச உ‌ள்ளார். இம்மாநாட்டில் 180 நாடுக‌ளில் இருந்து 1,500‌ பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

இப்பயணத்தின் போது இந்திய – இலங்கை இரு தரப்பு உறவுகள் குறித்தும் குறிப்பாக தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் சிறிசேன பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய – இலங்கை மீனவர் பிரச்னை குறித்த பேச்சு வார்த்தையில் இரு நாட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின் பேசிய இலங்கை அமைச்சர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என உறுதி அளித்தனர்.