தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் டொலர் செலவு : சிவசங்கர் மேனன்

vidiyalfm News ware

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சிவசங்கர் மேனன் எழுதிய நூலொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.