தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ஹீரோவான ஓபிஎஸ்

ja News

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாரத்தையெல்லாம் நேற்றே இறக்கி வைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் மரியாதைக்கு உரியர்கள் என்று அவர் கூறினார்.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டி வரும் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இப்போது கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டார். அதிமுகவின் 31 எம்.எல்.ஏக்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தது மத்திய அரசு. சசிகலா தரப்பின் நெருக்கடிகளுக்கு இடையே மத்திய அரசு மற்றும் திமுகவின் அமோக ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

சசிகலா தரப்பு நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த நிலையில் வேறுவழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இது மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது.

சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னமும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தாமதப்படுத்தும் மத்திய அரசு இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்து சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு.