தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ஓ.பி.எஸ்.ஸை நேரில் சந்தித்து இயக்குநர் பாலா ஆதரவு

1bala_1746049g

திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு கடந்த இரு தினங்களாக பொது மக்களும், தொண்டர்களும் அதிகளவில் வருகின்றனர்.

நீண்ட வரிசையில் நின்று முதல்வருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக பிரபலங்களில் சிலர், தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற திரைப்பட இயக்குநர் பாலா தனது ஆதரவை தெரிவித்துள்ளார் முன்னதாக இந்தியா டுடேவுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், முதல்வர் ஓ.பன்னீரசெல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிருந்தார்.